எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 10 - மலிங்காவின் அபார பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி சோமர்செட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நியூ சவுத்வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2வது அரைஇறுதியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பிளிஸ்சார்ட்டும், கன்வாரும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். கன்வாரின் (2 ரன்) பேட்டிங் மும்பைக்கு ஏமாற்றத்தை தந்தது. ஆனால் பிளிஸ்சார்ட் தனது பங்குக்கு வேகமாக ரன்களை சேர்த்தார். அதே சமயம் மறுமுனையில் அம்பத்தி ராயுடு (19 ரன்), பிராங்ளின் (6 ரன்) ஆகியோர் நீnullண்ட நேரம் நீnullடிக்கவில்லை. அரைசதத்தை nullர்த்தி செய்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிளிஸ்சார்ட் 54 ரன்களில் (39 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), முரளிகார்த்திக்கின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து 24 ரன்களை பெற்றுத்தந்த கீரன் பொல்லார்ட் (18 பந்து, 2 சிக்சர்) சிறிது நேரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டு பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ், திருச்சியை சேர்ந்த சதீஷ் ஆகியோரின் பயனுள்ள பங்களிப்பால் மும்பை அணி சவாலான ஸ்கோரை தொட்டது. குறிப்பாக சோமர்செட் அணியின் கேப்டன் அல்போன்சா தாமஸ் வீசிய 19வது ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்களை திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 23 ரன்களுடனும் (19 பந்து, 3பவுண்டரி), சதீஷ் 25 ரன்களுடனும் (12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். பின்னர் வெற்றி பெற 161 ரன்கள் இலக்குடன் ஆடிய சோமர்செட் அணிக்கு, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடக்கத்திலேயே இரட்டை செக் வைத்தார். அவரது பந்து வீச்சில் பீட்டர் டிரிக்கோ (0), வான்டெர் மெர்வ் (10) கிளீன் போல்டானார்கள். இதைத் தொடர்ந்து கீஸ்வெட்டரும், ஹில்ட்ரெத்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும் ஸ்கோர் மிதமான வேகத்திலேயே நகர்ந்ததால் நெருக்கடி உருவானது. ஹில்ட்ரெத் 39 ரன்களிலும், அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் போராடிய கீஸ்வெட்டர் (62 ரன், 46 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) 19வது ஓவரில் பிடிகொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து இறுதிகட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் சோமர்செட்டின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. 20வது ஓவரை `யார்க்கர் மன்னன்' மலிங்கா வீசினார். அவரது துல்லியமான யார்க்கர் தாக்குதலுக்கு முன்னால் சோமர்செட்டின் பேட்ஸ்மேன்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காம்ப்டன் (5 ரன்), முரளிகார்த்திக் (0) ஆகியோரின் ஸ்டம்புகளையும் சாய்த்த மலிங்கா கடைசி ஒவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். சோமர்செட் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய மலிங்கா 20 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இறுதிப்போட்டியில் மும்பை அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


