எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.18 -தமிழகத்தில் முதல் கட்ட வாக்குபதிவு நடைபெற்ற10 மாநகராட்சிகளில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.82 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவி இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஏற்கனவே 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 1,12,759 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க நேற்றும் (திங்கட்கிழமை), வருகிற 19ந் தேதியும்(நாளையும்) 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 பேர் வாக்களிப்பதற்காக 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 1,399 இடங்களில் 4,934 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 44 1/2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் 7 லட்சம் பணியாளர்களும், 80 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.மேலும், வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு செய்தபோது வீடியோ படம் எடுக்கப்பட்டது. இதேபோல் பிற பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி சாரதா பள்ளியிலும், சென்னை மாகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி சி.ஐ.டி.நகரில் உள்ள பள்ளியிலும், தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள பள்ளியிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.
அதே போல் மற்ற கட்சி தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு துவங்கியது. அனைத்து பகுதிகளிலும் அமைதியாகவே வாக்குப்பதிவு நடந்தது. பல வாக்குச்சாவடிகளில் பெண்கள் தனியாகவே வந்து வாக்களித்துவிட்டு சென்றதை காண முடிந்தது.
கடந்த முறை 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தல் பயத்தால் பலர் காலையில் பொறுமை காத்து வீட்டுக்குள்ளேயே அடங்கி இருந்தனர். ஆனால், பிறகு நேரம் செல்ல, செல்ல வாக்காளர்களின் வருகை அதிகரித்தது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தாங்கள் நினைத்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பொதுமக்களில் பலர் கூறினர்.
3 மணி நிலவரப்படி
10 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:-
சென்னை-30.13, கோவை-45.66, ஈரோடு-54.54, மதுரை-51.58, சேலம்-54.00, தூத்துக்குடி-55.64, திருச்சி-50.23, நெல்லை-50.47, திருப்பூர்-51.92, வேலூர்-44.00.
சரசாரியாக 3 மணி நிலவரப்படி 10 மாநகராட்சிகளிலும் 48.82 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2வது கட்டமாக நாளை (19ந் தேதி) 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.
2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் 21ந் தேதி (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து உள்ளது. அன்று மதியமே முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை விளக்கம்
06 Mar 2026மும்பை, ஈரான் கப்பல் தாக்கப்பட்டதும் தங்களுக்கு விடுத்த அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
06 Mar 2026நெல்லை, நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாடு '2030' செயல் திட்டத்தின் 14 அம்சங்கள் : கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Mar 2026சென்னை, வீட்டு வசதி முதல் ஜவுளித் துறை வரை தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான 14 திட்டங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இவற்றையெல்லாம் நனவாக்கி 2030-ம் ஆண்டில்
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
06 Mar 2026சென்னை, பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்துவதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க.
06 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
-
பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
06 Mar 2026திருவனந்தபுரம், பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில் சேவைக்கான கேரளாவின் நீண்டகால கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் க
-
மாமல்லபுரத்தில் இன்று த.வ.க. சார்பில் மகளிர் தின விழா - விஜய் பங்கேற்பு
06 Mar 2026சென்னை, சென்னை மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
06 Mar 2026சென்னை, அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவியை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்தது
06 Mar 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து விற்பனையானது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்துள்ளது.
-
ட்ரம்பின் முன்னால் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு
06 Mar 2026டெல்லி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு முன்னால் பேசுவதற்கு மோடிக்கு தைரியமில்லை என்று ராகுல்காந்தி, கெஜ்ரிவால்
-
திருச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
06 Mar 2026திருச்சி, திருச்சி மாநாட்டில் வருங்கால திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
அடுதத் 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி
06 Mar 2026நியூயார்க், ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
-
தனது சொந்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு வேறொரு நாட்டின் அனுமதி தேவையா? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
06 Mar 2026சென்னை, தனது சொந்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு வேறொரு நாட்டின் அனுமதி தேவையா? என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 6 பேரின் மனுக்களும் ஏற்பு
06 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க.
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
06 Mar 2026தென்காசி, திராவிட மாடல் 2.O ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார் என்றும், நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் துணை முதல்வர் உதய
-
த.வெ.க.வுடன் தேர்தல் கூட்டணி; நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
06 Mar 2026சென்னை, த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுடன் புதிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
தென்காசியில் ரூ.44.05 கோடியில் புதிய அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
06 Mar 2026தென்காசி, தென்காசி மாவட்டத்தில் 7,127 பயனாளிகளுக்கு ரூ44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மேகதாது அணை திட்டத்தை தீவிரப்படுத்தும் கர்நாடக அரசு பட்ஜெட் உரையில் சித்தராமையா அறிவிப்பு
06 Mar 2026பெங்களூரு, மேகதாது அணை தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்செய்யப்பட்டு, அதனுடன் வனத்துறை அனுமதிக்கான முன்மொழிவு ஆகியவையும் விரைவில் மத்திய அரசிட
-
ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த விரைவில் தடை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
06 Mar 2026அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
-
பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. விநியோகத்தில் பாதிப்பா..? மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம்
06 Mar 2026புதுடெல்லி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எரிபொருள் போதுமான அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த உற்பத்தியை அதிகரிக்குமாறு அனை
-
நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது அரசு
06 Mar 2026சென்னை, நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
-
9 மாவட்டங்களில் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கம் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர்
06 Mar 2026சென்னை, சென்னை மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநரகத்தில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
06 Mar 2026- கோவை கோணியம்மன் தீர்த்தம், யாழி வாகனத்தில் பவனி
- காங்கேயம் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்.
- திருவாரூர் தியாகராஜர் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
06 Mar 2026


