எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சில வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படும் பன்றி காய்ச்சல் பற்றியும், காய்ச்சல் நோய் அதிகரிப்பு பற்றியும் மற்றும் கொசுவினால் பரப்பப்படும் மலேரியா, டெங்கு, மற்றும் சிக்கன்குன்யா நோய்கள், தண்ணீரால் பரவக்கூடிய டைப்பாய்டு, காலரா போன்ற நோய்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள பேரல்கள், தொட்டிகள், பானைகள், பாத்திரங்கள், ஆகியவைகளில் கொசுக்கள் உற்பத்தியாகும். அத்தைகய இடங்களை மூடிவைக்கவும் வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்யவும் தண்ணீர் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடி வைக்கவும், தேவையற்ற, உபயோகமற்ற வீசி எறியப்பட்ட உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கப், டயர்கள், தேங்காய் மூடிகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய அனைத்து பொருட்களும் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டுமெனவும், கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும், மேலும், டெங்கு நோய் தடுப்பு பணிக்காக டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் (ஆயணனழழசள) மாவட்ட கலெக்டர் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக 80 களப்பணியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத கிணறு (ரரௌநன றநடட) களில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் தேங்காமல் மற்றும் கொசுப்புழு வளராமல் இருக்க சுகாதார செயலாளருக்கு எடுத்துரைத்தனர். டெங்கு நோய் தடுப்பு பணியில் மாணவர்களும் தங்களது வீட்டில் கொசுப்புழு பெருகும் இடங்களை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கவும் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களும் குளோரினேசன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் நகராட்சி,; பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதிர் கொசுக்களை அழிக்கவும் அடிக்கடி புகை மருந்து அடிக்கவும், மேலும், காய்ச்சல் கண்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டுமெனவும், போலி மருத்துவர்களை அணுக வேண்டாம் எனவும், போலி மருத்துவர்கள் யவரேனும் தங்கள் பகுதிகளில் இருந்தால் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ்அப் எண். 8903891077 மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட மேலாளர் சுகாதாரப்பணிகள்) மரு. ராஜ்குமார், உதவி திட்ட மேலாளர் (சுகாதாரப்பணிகள்) மரு. பாலவெங்கடேசன், கொள்ளைநோய் தடுப்பு மருத்துவர் (சுகாதார பணிகள்) மரு. விவேக், மருத்துவ அலுவலர் (பென்னாகரம்) மரு. கனிமொழி, மாவட்ட மலேரியா நோய் தடுப்பு அலுவலர் சிவராஜ், சித்த மருத்துவ அலுவலர் மரு. சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வைளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


