எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் - காஷ்மீர் எல்லையில் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.
தாக்குதல்
காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காலை 8 மணி அளவில் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் நவுசரா என்ற இடத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தானியங்கி ஆயுதங்கள், மற்றும் கையெறி குண்டு களை வீசினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பதிலடி
இதற்கிடையே அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ் தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சண்டையிலும் ஈடுபட்டனர்.பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இந்த மாதத்தில் இது 6-வது முறை நடை பெற்ற விதி மீறலாகும். கடந்த 3-ம் தேதி ரஜோளி மாவட்டம் பலாகோட் பகுதியில் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டன. 4-ம் தேதி பீம்பர்காலி பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், 8-ம் தேதி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி யிலும் துப்பாக்கி சூடு நடத் தியது.பூஞ்ச் பகுதியில் கடந்த 1-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சனாயம்மா சாம் என்பவர் உயிரிழந்தார். 9-ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் தீபக் ஜெகநாத் காத்ஜ் மரணம் அடைந்தார்.
228 தடவை ...
கடந்த ஆண்டு மட்டும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 228 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளது. அதே நேரத்தில் சர்வதேச எல்லையில் 221 தடவை போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


