எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா - மேற்குவங்காள மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக 4-வது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரே தலைவர்
இந்திய அளவில் பிராந்திய கட்சிகளில், மிகவும் முக்கியமான தலைவராக தற்போது மம்தா பானர்ஜி திகழ்ந்து வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்படும் ஒரே தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்காள மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை அதிரடியாக கொண்டு வந்தவர்.
மீண்டும் தேர்வு
இந்நிலையில், அனைந்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டரங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்புகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 10 ஆயிரத்தும் மேற்பட்ட திர்ணாமூல் கட்சியினர் மைதானத்தில் கூடினர்.
தொண்டராக இருக்க ...
தேர்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “தலைவர் பொறுப்பு வேறு யாரிடமாவது கொடுக்கப்பட்டிருந்தால், சிறப்பானதாக இருந்திருக்கும். எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன. கட்சியின் தொண்டராக இருக்கவே விரும்புகிறேன். ஏனெனில் தொண்டர்கள் தான் கட்சியின் சொத்து. தலைவர்கள் அல்ல” என்றார்.
4-வது முறையாக ...
1998-ம் ஆண்டு முதல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த நவம்பர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதும் 6 ஆண்டுகளுக்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


