எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை.- திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கியது. இக்கோயிலில் கோபுரங்கள், தளவரிசைகள் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு மே1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று கோயில் கொடி மரம் முன்பு கோயில் அறங்காவலர்கள் பெரியகருப்பன், மாணிக்கவாசகன் முன்னிலையிலும், கோயில் தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் தலைமையில் சோமசுந்தர குருக்கள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், தனபூஜை, கஜபூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜையை செய்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை ப்ரவேசபலி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
தொடர்ந்து இன்று நவக்கிரஹ ஹோமமும், மாலை வாஸ்துசாந்தியும் நடைபெறும். ஏப்.30ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மே 1ம் தேதி அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


