Idhayam Matrimony

ராஜஸ்தானில் 180 தொகுதியில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு

திங்கட்கிழமை, 1 மே 2017      அரசியல்
Image Unavailable

ஜோத்பூர்- ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் 180-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது முதல்வர் வசுந்த்ரா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி உள்ளது. அங்கு வரும் ஆண்டின் ஆரம்பத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 200 தொகுதிகளை கொண்ட சட்டசபையில் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பாரதிய ஜனதாவின் மாநில அளவிலான செயற்குழுக்கூட்டம் நேற்று ஜோத்பூரில் நடந்தது. கூட்டம் மாநில தலைவர்  அசோக் பர்னமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மாநிலத்தில் அடுத்தாண்டு ஆரம்பத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதிகள் 25-லும் வெற்றிபெறவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதற்காக கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். அமைப்பு ரீதியாகவும், வட்டார வாரியாகவும் கட்சியை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும். பல்வேறு தேர்தல்களில் பாரதி ஜனதா தொடர்ந்து வெற்றிபெற்று வருவதால் கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago