எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பூர் ஹைதர்கார்டனை சேர்ந்தவர் கணபத்லால்சோனு (வயது 64). இவர் பெரம்பூர் நெடுஞ்சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.
நகை, பணம்
வழக்கம் போல் கடையினை இவரது மகன் ராம்பால் (வயது 23) நேற்று காலை 9 மணியளவில் திறக்கிறார். திறந்து வைத்துவிட்டு 11 மணியளவில் உறவினர் யாரோ வருகிறார்கள் என்று ராம்பால் தன்னுயை அப்பா கணபத்லால் சோனுவை கடையில் விட்டுவிட்டு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேனுக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 25 வயது மதிக்கத்தக்க மர்மஆசாமிகள் 2 பேர் பூமிபூஜை நடத்துவதற்காக நவகிரக கற்கள் வாங்குவது போல் வந்தனர். அப்போது கணபத்லால்சோனு அந்தக்கற்களை கற்களுக்கு உண்டான பணத்தை கேட்டுள்ளார்.
அவர்கள் கொடுத்த உடன் மீதி பணம் கொடுப்பதற்காக கல்லாவை திறந்து சில்லறை எடுக்கும் போது கல்லாவில் இருந்த சுமார் 120 கிராம் மதிக்கத்தக்க நகையை எடுத்துக் கொண்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டனர். அப்போது கணபத்லால்சோனு திருடன் திருடன் என கத்தியவுடன் போலீஸ் பூத் அருகே இருந்ததால் அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் விரட்டியபோது பெரம்பூர் ஜமாலியா மேம்பாலம் அருகே போகும் போது அந்த 2 மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆட்டோவும், ஆட்டோ டிரைவரையும் மடக்கி பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீஸ் துணைக்கமிஷ்னர் டாக்டர் சுதாகர் , இன்ஸ்பெக்டர் ஷேக்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக்;கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பதிவாகி உள்ள 2 பேரின் உருவங்களை கொண்டு போலீசார் ஆட்டோ டிரைவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


