எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ, நவ.- 7- லக்னோவில் உள்ள சில முக்கிய மருத்துவமனைகளில் சி.பி. ஐ.அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சில மருத்துவ மனைகளில் தேசிய கிராமப்புற சுகாதார நிதியை தவறான முறையில் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக லக்னோவில் உள்ள சில தனியார் மற்றும் தொண்டு நிறுவன மருத்துவ மனைகளில் நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதை அடுத்து மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.க்கு தகவல் கொடுக்கப்பட்டது. டெல்லியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்று நேற்று காலை லக்னோ வந்து சேர்ந்தது. லக்னோவில் உள்ள தனியார் மற்றும் தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
குறிப்பாக 10 கண் மருத்துவ மனைகளில் இந்த சோதனைகள் நடந்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் கூறின.
நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய இந்த சோதனைகள் மாலை வரை நீடித்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
இந்த சோதனையின்போது என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


