எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக 27-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், பல்வேறு தனியார் அரங்குகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 04.05.2017 முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
68,961 நபர்கள்
டலூர் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி துவங்கப்பட்ட கடந்த 04.05.2017 முதல் 15.06.2017 வரை 41 நாட்களில் மொத்தம் 68,961 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். அரசுப் பொருட்காட்சி துவங்கப்பட்ட 41 நாட்களில் மொத்தம் ரூ.9,46,100. நுழைவுக்கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது.இப்பொருட்காட்சியானது 04.05.2017 முதல் 18.06.2017 வரை நாள்தோறும் மாலை 4.00 முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறுகின்றது. இப்பொருட்காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.
காண வாருங்கள்
இப்பொருட்காட்சியினை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பெரியோர், சிறியோருக்கான ஜெயின்ட் வீல், டோரா டோரா, இரயில், சறுக்கல், போட்டிங், இராட்டினங்கள், முப்பரிமான அனிமல் வோல்டு காட்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் இப்பொருட்காட்சியில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் நாள்தோறும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சிக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து பார்வையிட்டு பயன்பெறுவதோடு பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளையும் கண்டு களித்திடுமாறு கலெக்டர் டி.பி.ராஜேஷ், கேட்டுக்கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


