முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹாவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹாவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ,,, முன்னாள் வஃபு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் உடன் கலந்து கொண்டனர். உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது,

இறைவன் கொடுக்கிற வாய்ப்பை அனைத்து சமுதாய மக்களுக்கும் அற்பணிக்க வேண்டும் என்பதையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா வலியுறுத்துவார்கள்.அதன்படி அம்மா அவர்களின் அரசு மத வேறுபாடின்றி மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அரிசி வழங்கும் திட்டம்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 900 மெ.டன் அரிசி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.திருவாரூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க இதுவரை 73 பள்ளிவாசலுக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 195 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 31 ஆயிரத்து 448 இஸ்லாமியர்கள் பயன்பெறுவார்கள் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வேளாண் இணை இயக்குநர் மயில்வாகணன்,வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, ஜமாத் தலைவர் பாகர் அலி , மாவட்ட வழங்கல் அலுவலர் இருதய ராஜ், முத்துப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கே.பி.நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து