எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.
தேனீக்கள் பூவிலிருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. தேன் என்பது குளுக்கோஸ், புரக்டோஸ், நீர் மற்றும் சில என்ஸைம்கள் மற்றும் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிலிருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். தேனீக்கள்; உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாக கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது.
இயற்கையின் அருமையான, அற்புதமான கொடை - தேன். இதில் சிறந்த ஊட்டச்சத்துக்களும், தனித்துவமான மருத்துவப் பண்புகளும் அடங்கியுள்ளன. தேனை நாம் அப்படியே குடிப்பதில்லை, தண்ணீரிலோ, வெந்நீரிலோ, எலுமிச்சம்பழச்சாறு போன்றவற்றோடு சேர்த்து குடிக்கலாம். தேனின் பயன் அறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ண மருத்துவர்கள் தருகிறார்கள். தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். தேன் அதிக சத்து நிறைந்தது, எளிதில் செரிக்கக் கூடியது. 5 கிலோ பாலுக்கு 1 கிலோ சுத்தமான தேன் சமம். தேன் எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமானது. தேன் உடலுக்கு ஊட்டந்தரும் உணவாகவும், உடல் நலம் காக்கும் ஒப்பற்ற காவலனாகவும் இருப்பதனால் இதனை உயிர்க்காக்கும் 'அமிழ்தம்" எனலாம்.
தேனில் வைட்டமின் பி2, பி6, ஹெச், கே மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. தேன் 79.5 சதவிகிதம் சர்க்கரை சத்துக்களால் ஆனது. தேனில் குளுக்கோஸ் என்னும் பழச்சர்க்கரை, பிரக்டோஸ் என்னும் எளிதில் கரையக்கூடிய படிகச் சர்க்கரை, சுக்ரோஸ் என்னும் கரும்புச் சர்க்கரை அடங்கியுள்ளது. ஆகையால் இது எளிதாகச் செரிக்கக் கூடியதும் இரத்தத்தில் உடனே சேரக் கூடிய உணவுப் பொருளாகும். எனவே உடலுக்கு அதிக சக்தியை தருவதோடு உடல் நிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
தேன் மற்றும் இஞ்சி சாற்றை சம அளவு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளி, இருமல் போன்றவை குணமாகும்.
உடல் நிலை ஒரே சீராக அமைய காரச்சத்து தேவை. இந்தப் புளிப்பான அமிலத் தன்மையுடைய காரச்சத்து தேனில் இருக்கிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிது உதவுகிறது. மேலும் தேனிலிருக்கும் அமிலம், தீராத நோய்களை உண்டுபன்னும் நுண்ணுயிர்க் கிருமிகளையும் அழிக்கின்;றது.
ஓரு குவளை மிதமான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் தேனும், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் காலைக்கடன்களுக்கு முன் குடித்துவர இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொலுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும், உடலுக்கு அது கசப்புச்சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம் பெறுகின்றன.
அனைஸ் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இதயம் பலப்படும் இயங்குசக்தி அதிகரிக்கும்.
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
தேன் மூலம் கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், விக்கல், வாந்தி பேதி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு, வயிற்றுக்கடுப்பு, தாகம், தீப்புண் போன்றவை குணமாக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.
சிறிதளவு கருப்பு மிளகை பொடி செய்து அதே அளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்திவர ஆஸ்துமா குணமாகும்.
விளையாட்டு வீரர்கள் தேன் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலுக்குத் தேவையான சத்தான ஃபிரக்டோஸ் ஆக மாறி கிடைக்கிறது.
மனித உடலில் உள்ள கல்லீரல் மூலம் குளுக்கோசினை உற்பத்தி செய்ய தேன் உதவி செய்கிறது. இது மூளையில் சர்க்கரை அளவை அதிகரித்து வேகமாக கொழுப்பை கரைக்கும் ஹார்மோன்கள் விடுவிக்கிறது.
குடலிலுள்ள புண்கள், மற்றும் அழுகலை அகற்றுவதில் பயன்படுகின்றது. தேனை உண்டால் பசி உண்டாவதோடு,
குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு தேக்கரண்டி அளவு தேனைக் கொடுத்துவந்தால், அதுவே உறக்கத்தைத் தூண்டும் நல்ல மருந்தாகவும் செய்படும்.
உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது. உடல் பருமனானவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்தி வர, உடலிலுள்ள கெட்ட கொலுப்புகளை குறைக்கும் பலம் அதிகரிக்கும். மேலும் எலுமிச்சம்பழச்சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தாலும் உடல் பருமன் குறையும். உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்தி வர, உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும். குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடை கூடும்.
தேனை புண்களுக்கு மருந்தாகவும் பூசலாம். தீப்பட்ட காயங்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும்.
எலுமிச்சை பழத்தை வெந்நீரில் பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, பருகி வர குரல் வளம் பெரும், தொண்டைக் கட்டும் நீங்கும்.
தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
பேரீச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும்.
தேனில் நாட்டு ரோஜா மலரின் இதழ்களை போட்டு ஊறவைத்து உண்பதால், உடலுக்கு பலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும். இதையே குல்கந்து என்பர்.
தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் உணவு உண்பதர்க்கு முன் மூன்று தேக்கரண்டி தேனை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஈரல், வயிற்றுப்புண், பித்தப்பை நோய் சரியாகும்.
பித்த நீர்ச்சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கிவிடுகின்றன.
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
தேன் சிறந்ததென்றாலும் ஓர் அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது. தேனை சூடாக்குவதை தவிர்க்கவும். வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.
சுத்தமான தேனை கண்டறிய:- ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும், தேன் தண்ணீரில் கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேனாகும்.
தொகுப்பு – டாக்டர் ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், யோகா ரூ இயற்கை மருத்துவம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செந்தாரப்பட்டி, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.