Idhayam Matrimony

பெரியகுளம் நாமத்வாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளம்  நாமத்வாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் ப்ரபோதனமும், கோபூஜையும், மகாமந்திர நாம கீர்த்தனமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றது. பின்னர் 70 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மாலையில் குழந்தைகள் நிகழ்ச்சி மதுர கீதம் பஜனையும், துளசி பூஜையும் அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கான அலங்கார போட்டியும் நடைபெற்றது. பின்னர் பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணர் நகர் முழுவதும் வீதிவுலாவும் மகாமந்திர கீர்த்தனமும், இரவில் நந்தோத்சவமும், இரவு முழுவதும் மஹாமந்திர நாமகீர்த்தனம் தொடர்ந்து நடைபெற்றது. சொற்பொழிவுகளை ஸ்ரீஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடர் ஸ்ரீசுமந்த் பாகவதர் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  நாள் முழுவதும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாமத்வார் ஸ்ரீகிருஷ்ணசைத்தன்ய தாஸ் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து