எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் பயிர் நோயியல் துறை முனைவர் அ.சுதா பயிர் பாதுகாப்பில் உயிர்எதிர்கொல்லிகளின் பயன்பாடு பற்றி கூறுகையில், இரசாயனக் கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன.
மேலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை தரும் பூச்சி மற்றும் நுண்ணுயிரிகளை அழிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சூழ்நிலை சீர்கேடு ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. அத்துடன் இவை பயிர் வளர்ச்சியையும் அதிகரித்து விளைச்சலையும் அதிகரிக்கிறது.
சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைக்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும். வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடவும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை 2.5 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு எக்டர்க்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும்.
நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது. நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சத கரைசலை நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் கேழ்வரகு குலை நோய்க்கு சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.2 சத கரைசலை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் பயறு வகைப் பயிர்கள் வேரழுகல் மற்றும் வாடல் நோய்க்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
மேலும் டிரைகோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறு வகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
டிரைகோடெர்மா பயன்படுத்தும் முறையில் காய்கறிப் பயிர்களில் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகலுக்கு காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணி பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா பூசண கலவையை கலந்து பின்னர் விதைக்க வேண்டும்.
மேலும் காய்கறிப் பயிர்களில் வேரழுகல் மற்றும் வாடல் நோய்க்கு ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்பு நிலத்தில் இட வேண்டும். மேலும் டிரைகோடெர்மா பூசண கலவை 2.5 கிலோவை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை அந்த கலவையில் குறைந்தது 30 நிமிடம் நனைத்து பின்னர் நடவேண்டும்.
டிரைகோமெர்மா பயன்படுத்தும் முறையில் மஞ்சள் கிழங்கு அழுகலுக்கு மஞ்சள் கிழங்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை கலந்து விதைக்க வேண்டும். மேலும் வயலில் இடும் முறையில் ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா பூசண கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
டிரைகோடெர்மா பற்றிய பயிற்சி பல்கலைக் கழகத்தில் நோயியல் துறையில் தேவையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. டிரைகோடெர்மா பூசண கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துடன் கலத்தல் கூடாது. இந்த பூசண கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இந்த பூசண கலவையை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம். இந்த பூசணம் சில பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்து.
இது ஒரு சிக்கனமான முறை, இது பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. இது விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது மண்ணிலுள்ள கனிம பொருட்களைப் பயன்படுத்தி பல மடங்காக பெருகி செடிகளுக்கு பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு தருகிறது. இது தவிர உயிரினங்களுக்;கும் தோட்டத்தில் உள்ள மண்புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை.
மேலும் விவரங்கள் பெற சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி 0427 2422550 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
தொகுப்பு: முனைவர் அ.சுதா (பயிர் நோயியல்)
முனைவர் ப.கீதர் (திட்ட ஒருங்கிணைப்பாளர்)
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


