எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து, ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- சென்னை, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆ.ராஜேந்திரன் என்பவர் 17.11.2011 அன்று பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும் போது, பூந்தமல்லி புறவழி சாலையில் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 19.11.2011 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயருற்றேன்.
காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணியில் இருக்கும் போது காலமானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. ராஜேந்திரனின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலை விபத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் ஆ.ராஜேந்திரனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் நான் உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியுள்ளர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


