எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்,- தமிழ் நாடு முத லமைச்சர் ஆணையின்படி திண்டுக்கல்மா வட்டம் ஆத்தூர் வட்டம், மருதாநதி நீர் தேக்கத்திலிருந்து விவசா யிகள் பயன்பெறும்வ கையில் பாச னத்திற்காக தண்ணீரை மாவட்ட கலெக்டர் வினய் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மரு தாநதி நீர்த்தேக்கம் மூலம் 2359 ஏக்கர் பழைய ஆயக்காட்டிற்கு பாசன உறுதி அளிக்கவும் பழைய ஆயக்கட்டில் பாசன இடைவெளி ஆகிய 73 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கவும்இ தனுடன் சேர்த்து 4151 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கவும், மொத்தம் 6583 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க அணையிலிருந்து தமிழக முதலமைச்சர் ஆணைக்கி ணங்க மருதாநதி அணையிலிருந்து 150 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும்மு தல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஆத்தூர் வட்டத்தில் உள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி கிராமங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள சேவுகம்பட்டி, கோம்பைபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெற ஏதுவாக அமைந்துள்ளது. மருதாநதி அணையின் நீளம் 2650 அடி (808 மீட்டர்), அணையின் உயரம் 74 அடி, அணையின் கொள்ளளவு 188.5 மி.கன அடி, பழைய பாசனம் 2359 ஏக்கர், பழைய பாசன இடைவெளி 73 ஏக்கர் புதிய பாசனம் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் 4151 ஏக்கர் ஆக மொத்தம் 6583 ஏக்கர் ஆகும். தற்போது அணையில் நீர் இருப்பு 72 அடி உள்ளது. கொள்ளளவு 175 மி.க.அடி., நீர்வரத்து 20 ஆகும்ம ருதாநதி நீர் தேக்கத்திலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விட ப்பட்டுள்ளதால்வி வசாயிகள் அனை வரும் அதிக மகசூலைப் பெறும் நோ க்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட கலெக்டர் வினய்; தெரிவி த்தார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் மஞ்சளாறு வடிநில கோட்டம் (பெரி யகுளம்) குமார், உதவி செயற்பொ றியாளர் மருதாநதி வடிநில உபகோ ட்டம் சௌந்தரம், உதவி பொறியாளர் மருதாநதி அணைப்பிரிவு மோகன்தாஸ், ஆத்தூர் வட்டாட்சியர்ரா ஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


