Idhayam Matrimony

தலைமலைப்பட்டி பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்: கலெக்டர் கு.ராசாமணி உறுதி

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      திருச்சி
Image Unavailable

 

தொட்டியம் ஒன்றியம் எம்.களத்தூர் ஊராட்சி தலைமலைப்பட்டியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார்.முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் வேளாண் இணை இயக்குனர் உடும்மன்மைதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ),அஸ்பான்,கால்நடை உதவி இயக்குனர் சையதுமுஸ்தபா ஆகியோர் தங்கள் துறை குறித்து பேசினர்.

கலெக்டர் உறுதி

 

விழாவில் கலெக்டர் ராஜாமணி 803 பேருக்கு 15 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது. மத்திய மாநில திட்டங்களை அறிந்திராத மக்களுக்கு அந்த திட்டங்களை வழங்கவதற்காகத் தான் இந்த மனுநீதி நாaள் முகாமாகும். மேய்க்கல்நாய்க்கன்பட்டி மக்களின் கோரிக்கை ஏற்று தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதிஉதவியுடன் சுற்றுச்சுவுர் கட்டித்தரப்படும். மேலும் பள்ளிக்கு குடிநீர் பிரச்சனையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.ஆறு லட்சம் ரூபாய் செலவில் பள்ளிசெல்லும் சாலையும் அமைத்துதரப்படும்.தமிழகத்தை சுகாதார மாநிலமாகவும்,குறிப்பாக திருச்சி மாவட்டத்தை சுகாதார மாவட்டமாகவும் ஆக்கிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அரசு மூலம் வீடுகளில் கழிப்பறை கட்டிகொள்வதற்கு ரூ12 ஆயிரம் வழங்கப்படுகிறது, சுகாதாரத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார். விழாவில் வேளாண் உதவி இயக்குனர் ராஜாமணி, வேளாண் அலுவலர் புஷ்பா,கால்நடை மருத்துவர் பாரிவேள்,சமூக நலத்திட்ட தாசில்தார் பிரகாஷ்,துணை தாசில்தார் சேக்கிழார்., வருவாய் அலுவலர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முசிறி ஆர்.டி.ஓ ராஜ்குமார் வரவேற்றார்.தொட்டியம் தாசில்தர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.முகாம் ஏற்பாடுகளை வி.ஏ.ஓ பாரதி செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து