எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாவூர்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் டெங்கு தடுப்பு மற்றும் விழ்ப்புணர்வு பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வீடு வீடாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
டெங்கு தடுப்பு பணிகள்
கீழப்பாவூர் யூனியன் பகுதியான பாவுர்சத்திரம், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, சடையப்புரம், மேலப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நடைபெறும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழ்ப்புணர்வு பணிகளை பார்வையிட நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி வந்தார். பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வடக்கு பகுதியான காவல் நிலைய பின்புறமுள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதே தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த மாரியம்மாள் என்பவரது மகள் இசக்கி (வயது 9), ராமசுப்பிரமணியன் என்பவரது 6 மாத ஆண் குழந்தை சுபீக்சன் ஆகிய இருவரின் பெற்றோரிடம் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது வீடுகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் பிளாஸ்டிக் கப்புகள், தென்னை சிரட்டைகள், டயர்களை அப்புறப்படுத்த குலசேகரப்பட்டி பஞ் துப்பறவு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உத்த்ரவிட்டார். இதனை தொடர்ந்து ;அந்த தெருவில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வீடு வீடாக நேரில் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டிலிருந்த பெண்களிடம் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் அதனை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். அதனை கேட்ட பெண்கள் இனி வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதாகவும் லார்வா புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக மழை நீ;ர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் கலெக்டரிடம் உறுதி கூறினர். பின்னர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் உபயோகமில்லாமல் ஆங்காங்கே கிடந்த கார் டயர்களையும், விபத்துகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிக்கி தேங்கி கிடக்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பெட்டிகளில் அவ்வப்போது ;பெய்யும் மழை தண்ணீh தேங்கி நிற்பதையும் அதில் லார்வா புழுககள் உற்பத்தியாகி இருப்பதையும் பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்தும் படி சுகாதார பணியாளர்களுக்கு உத்த்ரவிட்டார். இதனை யடுத்து கீழப்பாவூர் யூனியன் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கழிவறை கோப்பைகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் துப்பறவு பணியாளர்களை எச்சரித்து உடனயாக அந்த பகுதிகளை சுத்தம் செய்யும் படி கூறினார். கலெக்டரின் ஆய்வுப்பணியின் போது கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் ஜனார்த்தனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, பொறியாளர்கள் பூச்சென்டு, சுப்பாராயன், பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார், ஆண்டாள், முழு சுகாதாரபணிகள் வட்டார ஒறுங்கினைப்பாளர் தர்மராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இச்க்கியப்பா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், குலசேகரப்பட்டி பஞ் பணியாளர் வல்லாள மகாராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பாவூர்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் சுகாதாரம் மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மதிய உணவையும் மறந்து நான்கு மணிவரை 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீடு வீடாக நடந்தே சென்று அங்கிருந்த பெண்களிடம் அன்பாக பேசி சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நெல்லை மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


