முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்புற்றுநோயை ஒழிக்க போராடும் இந்திய அரசுக்கு பான் கீ மூன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

ஐ.நா.டிச.- 10 - மேற்காசியா, இந்தியா போன்ற நாடுகளில் ஊழல் புற்றுநோயை ஒழிக்க போராடி வரும் சக்திகளுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.  உலக நாடுகள் முழுவதும் ஊழல் அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் எல்லையில்லா ஊழல் நடந்து வருகிறது. மேற்காசியா நாடுகளில் ஊழலுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். அதேமாதிரி இந்தியாவிலும் ஊழலை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது. ஊழலை ஒழிக்க பலமான ஜன்லோக்பால் மசோதாவை கொண்டுவரக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஊழல் புற்றுநோயை ஒழிக்க போராட்டம் நடத்தி வரும் சக்திகளுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாடுகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழலானது சமத்துவமின்மையையும் அநீதியையும் ஊக்குவிக்கிறது என்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார். ஊழலால் சமுதாயத்தில் ஏழைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதை நீண்டகாலம் பார்த்துக்கொண்டு அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. அரபு நாடுகளான ஏமன், ஜோர்டான், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் ஊழலுக்கு எதிராக நடந்து வரும் போரில் சாதாரண மக்களும் சேர்ந்துகொண்டுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான ஊழலை ஒழிக்க சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மக்கள் எழுச்சியானது பெரும் சர்வதேச அளவில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் அண்ணா ஹசாரேவுக்கு இந்தியாவில் மட்டும் அல்லாது உலக முழுவதும் மக்கள் ஆதரவும் பாராட்டும் கிடைத்துள்ளது. அனைத்து நாடுகளையும் பாதிக்கும் இந்த ஊழல் என்ற புற்றுநோயை ஒழிக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அந்த செய்தியில் பான் கீ மூன் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago