முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணிகளை மேற்கொண்டார்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் நேற்று (18.12.2017) தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணிகள், தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார்.

துப்புரவு பணி

சேலம் மாவட்டம் திண்டமங்கலம் ஊராட்சியில் பனங்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சமூக வரைப்படங்களை பார்வையிட்டும், தூய்மை பாரத இயக்கத்தின் புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டும், தூய்மை பாரத இயக்கத்தின் அடுத்த ஒரு மாதங்களுக்கான தூய்மை பணி செயல்பாடுகள் குறித்த நாட்காட்டியினை வெளியிட்டும், திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மேலும், தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டிமுடிக்கப்பட்டதை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து தூய்மையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியினை மேற்கொண்டார்கள்.

திண்டமங்கலம் ஊராட்சி பாரதி நகரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செடி வளர்ப்பு நாற்றங்கால்களை பார்வையிட்டும், மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், அசோலா உற்பத்தி செய்யும் பணிகளை பார்வையிட்டார்கள். இதனை தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதிலிருந்து விடுதலை என்கின்ற துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே தூய்மையாக இருப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இந்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அவற்றிலுள்ள விபரங்களை அனைவரும் அறியும் வண்ணம் அங்குள்ளவர்களை படித்து காண்பிக்க சொன்னார்கள்.

சேலம் அஸ்தம்பட்டி அரசினர் ஆய்வு மாளிகையில் சேலம் மாவட்டம் குறித்த விளக்க தொகுப்பினை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்கள்.இந்நிகழ்ச்சிகளில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.ராஜகோபால், , கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, , மாநகர காவல் ஆணையர் சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மேட்டூர் சார் கலெக்டர் மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் ரே.சதீஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து