Idhayam Matrimony

வங்கி அதிகாரி போல பேசி பணம் அபகரித்த கும்பலைச் சேர்ந்தவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      சென்னை

சென்னை, கந்தன்சாவடியிலுள்ள நிறுவனத்தின் குசயரன ஊடிவேசடிட ருnவை-ன் மேலாளர் திருவிபின் தாமஸ் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில், யாரோ சிலர் வங்கி அதிகாரி போல வாடிக்கையாளர்களிடம் செல்போனில் பேசி அவர்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று, அதன் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி மோசடி செய்து வருவதாகவும், இதுபோல சோமையா குப்தா என்பவரிடம் ஒரு நபர் பேசி அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.72,500/-க்கு பொருட்கள் வாங்கி மோசடி செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணை

காவல் ஆணையர் இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.வங்கி மோசடி தடுப்புப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி மோசடி நபர்கள் குடiயீமயசவ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பொருட்கள் வாங்க மேற்படி புகார்தாரரின் பணம் ரூ.72,500/-ஐ செலுத்தியிருந்ததும், அதன் மூலம் சென்னைக்கு வந்த பொருளை, சென்னையிலுள்ள கூரியர் டெலிவரி நபர் மூலம் கொடுக்கும்போது, குற்றவாளி ராஜா, 35 /பெ.அண்ணாமலை, எண்.30, பொன்னியம்மன் கோயில் தெரு, சாலிகிராமம், சென்னை என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.72,500/- மதிப்புள்ள ஆன்லைன் பொருள், செல்போன்கள்-2, டெபிட் கார்டுகள் - 10 மற்றும் சிம் கார்டு - 6 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் டெல்லியிலிருந்து வங்கி அதிகாரி போல பேசி, ஆன்லைன் மூலம் பொருட்களை பதிவு செய்து ஏமாற்றும் கும்பலிடமிருந்து குற்றவாளி ராஜா கமிஷனாக பணம் பெற்று, அவர்கள் மோசடி செய்து பெறும் பார்சல்களை குற்றவாளிகளுக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் குற்றவாளி ராஜா மீது திருப்பூர் காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 7 செயின் பறிப்பு வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் ராஜா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து