எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வங்கிக்குழு சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாமினை கலெக்டர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்து, பல்வேறு வங்கிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 366 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.பின்னர், கலெக்டர் பேசியதாவது-
முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம்
மத்திய, மாநில அரசுகள் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தொழில் தொடங்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில் அதிகளவில் தொழில் தொடங்கிட முத்ரா திட்டம், நீட்ஸ் திட்டம் உள்ளிட்ட பலத்திட்டங்களின் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கி கடன் உதவிகளை அனைவரும் தெரிந்து கொண்டு, கடன் பெறுவதற்கான விதிமுறைகளையும், திட்டங்களையும் அறிந்து தொழில் தொடங்கிடும் வகையில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்கிடும் கடனுதவிகள் அனைத்தும் வங்கிகள் மூலம் தான் வழங்கப்படுகிறது. வங்கிகள் கடனுதவி பெற்று, தொடங்கப்படும் தொழில்கள் இலாபகரமானதா என்பதனை வங்கிகள் ஆய்வு செய்து வழங்குவதால் அதற்கு தகுந்தவைகளான தொழில்களை தேர்வு செய்திட வேண்டும். நல்ல இலாபம் வரும் வகையிலும் மற்றவர்களை பாதிக்காத வகையிலான தொழில்களை இளைஞர்கள் தேர்வு செய்திட வேண்டும். முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.10 இலட்சம் வரையிலான கடன் பெற பிணையம் தேவை இல்லை. இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தொழில் கடன் பெறும் அனைவரும் சிறப்பாக தொழில் செய்து, பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டுமென பேசினார்.இம்முகாமில் நிதிசார் கல்வி ஆலோசகர்கள் பார்த்திபன், மகாலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கஜேந்திரன்நாதன், நபார்டு வங்கி டிடிஎம் சலீமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேஸ்வரன், முதன்மை மண்டல மேலாளர் ராஜாகுமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன பிரதிநிதி இளங்கோ மற்றும் வங்கியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


