எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று(16.01.2018) ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது.
ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற கூலமேட்டில் நாளை தினம் (17.01.2018) ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காவல்துறை அலுவலர்கள் போதுமான காவல் ஏற்பாடுகள் செய்யவும், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையாளர் மாடம், தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் ஜல்லிக்கட்டில் 585 மாடுகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அறிக்கை அனுப்பவும், ஜல்லிக்கட்டு நடத்துவதை கண்காணிக்க வருவாய்த்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, காவல்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளை கொண்ட அமைப்பினை கோட்ட அளவில் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிககப்படவும், அக்காளைகள் ஊக்குவிப்பு மருந்துகளோ போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத்திடல் அருகில் போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர் பகுதிகளை ‘மரக்கவசம்’ அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர் மூலம் கூர்மழுங்கச் செய்யவும், காளைகள் விளையாட்டில் பங்கேற்குமுன் ஓய்வாக இருக்க கட்டுத்துறை, தண்ணீர் வசதி செய்து காளைகளின் திடக்கழிவு மற்றும் சிறுநீர் கழிவுகளை அகற்ற போதுமான ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காளைகளின் மிளகாய்ப்பொடி தடவுதல், சகதி தடவுதல், மூக்குப்பொடி தடவுதல் போன்ற தகாத செயல்களால் அவைகளை வெறியூட்டச் செய்யாதிருத்தலை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்னர் 20 நிமிடத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தப்படுவதுடன் மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் இட வசதியுடன் 100 மீட்டர் நீலத்திற்கு அமைக்கப்படவேண்டும். மாடு அடையும் பகுதி மாடு ஒன்றிற்கு 60 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கண்ட பகுதியில் மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், தீவனம், மற்றும் நிழலுக்காக துணிப்பந்தல் அல்லது கூரையால் வேயப்பட்ட பந்தல் போன்ற வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனை
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் காவல்துறையினரால் உறுதி செய்திடவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முழுவதுமாக கால்நடை பராமரிப்புத் துறையினரால் முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் விதிமுறைகளின்படி அந்த காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளை கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித்துறையினரிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவி குதித்து வரா வண்ணம் குறைந்த பட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்கவும், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைப்பாளர்கள் மேற்கண்ட நெரிமுறைகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், வருவாய் கோட்டாட்சியர் செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லோகநாதன், கால்நடை கண்காணிப்பாளர் மரு.தேவேந்தரன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.