எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேற்று (13.02.2018) வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2017 முதல் டிசம்பர் 2017 வரை டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்தமைக்காக பொது சுகாதாரத்துறைச் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் 44 பேருக்கும், பூச்சியியல் வல்லுநர்கள், நுண்ணுயிர் வல்லுநர்கள் 4 பேருக்கும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 6 பேருக்கும் என 54 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள். பின்னர், சுகாதாரத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பொதுமக்களின் நலனுக்காக தங்களது பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்திட வேண்டும்கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.வீ.சி.ஹேமசந்த்காந்தி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.உமாமகேஸ்வரி (கடுகூர்), மரு.மணிவண்ணன் (திருமானூர்), மரு.மேகநாதன் (செந்துறை), மரு.கண்ணன் (ஆண்டிமடம்), மரு.தட்சனாமூர்த்தி (தா.பழூர்), மரு.லட்சுமிதரன் (ஜெயங்கொண்டம்), வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் நுண்ணுயிர் வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


