எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் மாசித்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.
தேரோட்டம்
13 நாட்கள் நடைபெறும் மாசிப்பெருவிழா கடந்த 14}ம்தேதி மகாசிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.15}ம்தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், 18}ம்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.ஏழாம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தங்க கவசத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அபிஷேர ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வித பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஆயிரகணக்கான பக்தர்கள் கரகோஷத்திடையே தேரினில் அமர்ந்து அருள்பாலித்தார். பின்னர் கூடியிருந்த பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.விழாவில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், செஞ்சி எம்எல்ஏ. செஞ்சி மஸ்தான், முன்னாள் எம்எல்ஏ.பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி சார்பு மன்ற நீதிபதி ராஜாராமன், மாவட்ட நீதிபதி சரோஜாதேவி, இந்து சமய மாவட்ட உதவி ஆணாயர் சி.ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் செஞ்சி டிஎஸ்பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான போலீஸôர் மற்றும் ஊர்காவல் படையினர், தீயணைப்பு துறையினர், சுகாரத்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


