எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை, இந்திய அஞ்சல் துறை இணைந்து திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
சேவை மையம்
விழாவுக்கு தமிழக முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் எம்.சம்பத் முன்னிலை வகித்தார். மண்டல கடவுச் சீட்டு அலுவலர் பி.கே.அசோக்பாபு வரவேற்றார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை தலைமை வகித்து தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார். ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்புரையாற்றினார். செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர், பொதுமக்களிடம் இருந்து புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மண்டல கடவுச்சீட்டு அலுவலர் அசோக்பாபு கூறும்போது, "பாஸ்போர்ட் பெற சென்னை அலுவலகங்களுக்கு வர வேண்டும். அந்த நிலை மாற்றப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் தலைமை அஞ்சல் நிலையங்களில் பார்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. புகைப்படம் உட்பட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்" என்றார். சென்னை நகர மண்டல இயக்குநர் ஏ.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


