எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆய்வு செய்தார்.
ஆணையர் ஆய்வு
கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 59 வசந்தம் நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் 320 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் (குயஎடிரச க்ஷடடிஉம) சாலை அமைக்கும் பணிகளையும், கோட்டம் எண் 60 சீலநாயக்கன்பட்டி ஊத்து மலை அடிவாரம் பகுதியில் 2015 – 16 உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ. 1 கோடியே 68 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகளையும் , கோட்டம் எண் 55 அம்மாள் ஏரி ரோடு பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 4 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆணையாளர் பார்வையிட்டு, அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் ஆர். ரவி, உதவி செயற்பொறியாளர் ஆர். செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


