எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செங்கோட்டையில் இருந்து-கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது வர்த்தகர்கள், ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றது.கோடை விடுமுறையை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து கோவைக்கு வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில் இயக்கம்
இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு கோவை சென்றடையும் என தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்காசி, செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் செங்கோட்டை – கோவை சிறப்பு ரயில் மாலை 5 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டால் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த ரயிலில் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவே இந்த ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.இந்நிலையில் தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று (10ம் தேதி) முதல் தென்னக ரயில்வே மூலம் இயக்கப்படும் செங்கோட்டை – கோவை சிறப்பு ரயில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக சென்று மறுநாள் காலை 5.45 மணிக்கு கோவை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி நேற்று இரவு 8 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. செங்கோட்டை-கோவை சிறப்பு ரயில் இயக்கம் வர்த்தகர்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


