எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்டாய், மார்ச்16 - பூகம்பம் மற்றும் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் உள்ள அணு மின் நிலையம் ஒன்றில் ஏற்கனவே 3 அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு ஏற்பட்ட நிலையில் நேற்று 4வது அணு உலையும் வெடித்து சிதறியது. இதனால் கதிர்வீச்சு அதிக அளவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் பல ஆயிரம் கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டன. இதுவரை சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர்.
இது வரை ஜப்பானில் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு ரூ.8 லட்சம் கோடி இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
கட்டிடங்கள், வீடுகள் பெரும்பாலானவை தரை மட்டமாகிவிட்டன. இதே போல ஹுக்குசிமா என்ற இடத்தில் உள்ள அணு மின்சார நிலையத்தில் இதுவரை 3 அணு உலைகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அணு மின் நிலையத்தில் நேற்று மேலும் 2 வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த அணு மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நவோடோகான் தெரிவித்துள்ளார்.
இந்த அணு கதிர்வீச்சினால் மனிதர்களின் உடல் நலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டோக்கியோவில் சாதாரண அளவை விட கதிர்வீச்சு அதிகமாக உள்ளது என்றும், இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்றும் அந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த அணு சக்தி நிலையத்தை சுற்றி சுமார் 30 கி.மீ.சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் உள்ள மக்களும் கூட தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணு மின் நிலையத்தின் 4-வது அணு உலையில் நேற்று திடீர் என்று தீப்பிடித்துக்கொண்டது. இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது என்றாலும் அணுக் கதிர் வீச்சு வெளியேற்றத்தை தடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அணு மின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளில் 4 உலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
ஜப்பானில் இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு நகரங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் அணு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இப்போது அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அணு கதிர் வீச்சினால் அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் ஜப்பான் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


