எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்,ஜன.- 17 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. நாட்டில் குறிப்பாக வட மாநிலங்களில் அதுவும் ஜம்மு-காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அதுவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும். அதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் விழுந்து கிடக்கும் இதனால் போக்குவரத்து தடைபடும். கடந்த பல நாட்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் கிடக்கின்றன. இதனால் மோட்டார் வாகனங்கள் செல்லமுடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கார், டூரிஸ்ட் பஸ்கள், கார்கள் ,ஜீப்கள் ஆயிரக்கணக்கில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், ஜம்மு நகர் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள இதர பகுதிகளில் தங்கியுள்ளனர். நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள குவாஜிகுந்த், பனிஹால், ஜவஹர் குகை வழி, ஷாந்தன் நல்லாஹ் ஆகிய பகுதிகளில் 4 அடி உயரம் வரை பனிக்கட்டிகள் கிடக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு,உத்ம்பூர், படோதே ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், கியாஸ் லாரிகள் செல்ல முடியாமல் இருக்கின்றன. இதனால் ஸ்ரீநகர் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஸ்ரீநகருக்கு செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் ஜம்மு மற்றும் இதர பகுதிகளில் தங்கியுள்ளனர். டன்னலுக்கு அந்த பகுதியில் உள்ள ஸ்ரீநகர், குவாஜிகுண்டு, அனந்த்நாக் பகுதியிலும் பழங்கள், கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரிகள் மற்றும் காலி சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிற்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


