எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 19 - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சமையல் கேஸுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நாமக்கல் கலெக்டர் லாரி உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்பள, வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் 4100 டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 47 பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு எல்.பி.ஜி. டேங்கர்கள் வராததால் கேஸ் நிரப்பும் பணி முற்றிலுமாக பாதித்துள்ளது. பிளாண்டுகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு சொந்தமான பாட்டிலிங் பிளாண்டுகள் சேலம், பெருந்துறை, நெகமம், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளிலும், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் பிளாண்ட் கும்மிடிப்பூண்டியிலம் இயங்கி வருகின்றன. டேங்கர் லாரி ஸ்டிரைக் காரணமாக கேஸ் நிரப்பும் பணி நடைபெறவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் இருந்துதான் கேஸ் வரவேண்டியுள்ளது. கேஸ் ஏஜென்சிகளுக்கு தினமும் 2 லாரி சிலிண்டர்கள் வரும். ஆனால் தற்போது ஒரு லாரி மட்டும்தான் வருவதாக ஏஜெண்டுகள் கூறுகிறார்கள். அதனால் சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு 45 நாட்கள் கழித்தே சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவதாக ஏஜெண்டுகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகைக்கு முன்புவரை 30 லட்சம் பேர் தமிழகத்தில் கேஸுக்கு பதிவு செய்து காத்திருந்தனர். இவர்களுக்கு முன்புபோல் சிலிண்டர் சப்ளை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் புதிதாகவும் சிலிண்டருக்காக பொதுமக்கள் பதிவு செய்து வருகிறார்கள். டேங்கர் வேலை நிறுத்தத்தால் பதிவு செய்தோருக்கு முன்புபோல் சிலிண்டர்கள் தர முடிவதில்லை. கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் காரணமாக 10 ஆயிரம் டன் சிலிண்டர்கள் நிரப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால் தினமும் ரூ. 2.5 கோடி வீதம் நேற்றுவரை ரூ. 12.5 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கேஸ் தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் அதிகமாகிவிடும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்றார்.
ஆனால் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் இன்னும் எங்களை அழைக்கவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றார். இதனிடையே நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கலெக்டர் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வுகாண தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை ஆயில் நிறுவன அதிகாரிகள் எங்களை பேச்சுவாத்தைக்கு அழைக்கவில்லை. எனவே எங்களது பேச்சுவார்த்தை தொடரும் என்றார். இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு உங்களின் கோரிக்கைகளை பரிந்துரை செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


