முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் சொத்துக்கள் இல்லை - விஜய் மல்லையா

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      வர்த்தகம்
Image Unavailable

கடன் பாக்கிக்காக விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அவர் நடத்தி வந்த கிங்பி‌ஷர் விமான நிறுவனம் ரூ.800 கோடி பாக்கி வைத்து இருந்தது. அதற்காக அவரது ஏ319 ஜெட் சொகுசு விமானம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்தது. இந்த நிலையில் லண்டனில் தங்கியிருக்கும் விஜய் மல்லையா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது “இங்கிலாந்தில் உள்ள எனது சொத்து விவரங்களை கோர்ட்டில் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறேன். எனவே அவற்றை முடக்கி கடனுக்காக வங்கிகள் பறிமுதல் செய்து கொள்ளலாம். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் சொத்துக்கள் எதுவும் என் பெயரில் இல்லை. ஆடம்பர மாளிகை எனது குழந்தைகள் பெயரிலும், லண்டனில் உள்ள வீடு எனது தாயார் பெயரிலும் உள்ளது. எனவே சொத்துக்கள் எதையும் பறிமுதல் செய்ய இயலாது. சில கார்கள், சில நகைகள் உள்ளது. வேண்டுமானால் அவற்றை பறிமுதல் செய்யட்டும். அதில் எந்த தடையும் இல்லை. நானே அவற்றை ஒப்படைக்கிறேன். அதற்கான நாள், நேரம் மற்றும் இடத்தை தெரிவிக்கட்டும் என பதட்டமின்றி மிரட்டும் பாணியில் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து