எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா, பீகாரில் சிறுமிகள் பலாத் காரம் செய்யப்பட்ட வழக்கில், சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் கூடிய ஆதரவற்றோர் இல்லம் செயல் பட்டு வந்தது. இங்கு தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள், அதிகார வர்க்கத்தினாரால் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக முசாபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான ரவி ரோஷன் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பீகார் சமூக நலத்துறை அமைச்சரான மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மாவுக்கும், சம்பந்தப்பட்ட காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இதுதொடர்பான பல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன. இந்த விசாரணை அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சுவர்மாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், கணவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, மஞ்சுவர்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


