எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன. - 31 - தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ரோசய்யா உரையுடன் நேற்று காலை தொடங்கியது. கவர்னர் உரைக்கு பிறகு பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக சட்டமன்ற அலுவலர் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 4ந் தேதி வரை இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது. நாளைய கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களை டி.என்.வடிவேல், வி.இரா.கிருஷ்ணசாமி, செ.தாமோதரன், ஆ.மு. ராமசாமி, வி.வேதையன், பி.எஸ்.மணியன், கோ. மோகனதாசன் ஆகியோர் இரங்கல் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதை தொடர்ந்து 2011 12ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான முதல்துணை நிதிநிலை அறிக்கை சட்ட சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். பிப்ரவரி 1 மற்றும் 2ந் தேதிகளில் காலை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 3ந் தேதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கை மீது விவாத மின்றி வாக்கெடுப்பு நடை பெறும். துணை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்து ஆய்வு செய்து விவாதமின்றி நிறைவேற்றப்படும். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 4ந் தேதி (சனிக்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரையும் இடம் பெறுகிறது. இதையடுத்து மசோ தாக்கள் ஏதாவது இருந்தால் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும். சட்ட மன்றம் தினசரி காலை 10 மணிக்கு தொடங்கும். கேள்வி நேரம் இடம் பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


