முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் அறிவித்தார்.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.

புதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து