முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      அரசியல்
Image Unavailable

சிக்மகளூரு, உள்ளாட்சி தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேவகவுடா கூறினார்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவகவுடா எகட்டி கிராமத்துக்கு வந்தார்.  அங்கு அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் சில மாவட்டங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள், பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம்.

கர்நாடகத்தில் தற்போது நடந்த நகர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து