எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி, பிப்.8 - பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி- வள்ளி-தெய்வானை திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருத்தேரோட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனர். பழனியில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்பு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற நகரத்தார் காவடி குழுவினருக்கு பழனியை அடுத்த ஆயக்குடி அகோபில வரதராஜபெருமாள் கோவிலில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது. அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் காவடி பூஜை, மகேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தினர். நகரத்தார் காவடியினர் நாளை (9 ம் தேதி) காவடிகளை மலைக்கோவிலில் செலுத்துகின்றனர். பழனி மலையில் உள்ள மண்டபத்தில் தங்கி சிறப்பு வழிபாடு, பூஜைகள், அன்னதானம் நடத்துகின்றனர்.
தைப்பூச திருநாளான நேற்று காலை 5.30 மணியளவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தேவசேனாவுடன் சண்முக நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தேவசேனாவுடன் தேரில் எழுந்தருளினார். மாலை 5.35 மணியளவில் நான்கு ரதவீதிகளில் இத்திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார், மாவட்ட கலெக்டர் நாகராஜன், பழனி ஆர்.டி.ஓ. வேலுச்சாமி, தாசில்தார் கெளசலாம்பிகை, நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையர்க்கரசி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், செந்தில், பழனிவேல், கந்தவிலாஸ் செல்வகுமார், பிரசாத ஸ்டால் அரிஹரமுத்து, முருகனடிமை பாலசுப்பிரமணியம், நாடார் ஸ்டோர் உரிமையாளர் பாலன், எம்.எல்.ஏ. வேணுகோபாலு, நகரச் செயலாளர் பரதன், யூனியன் சேர்மன் ஏ.டி.செல்லச்சாமி, ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், நகர்மன்றத் தலைவர் வேலுமணி, கவுன்சிலர்கள் மகேஸ்வரி சக்திவேல், சுரேஷ், பெரியநாயகி அறக்கட்டளை சுந்தரம், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, திருப்பூர் லாட்ஜ் மகேஷ் மற்றும் தேரடி பாலு, செல்வராஜ், கார்த்திகேயன், குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


