முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விஞ்ஞானி டார்வினின் செல்ல பிராணி

உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து முதன் முதலாக உலகுக்கு புதிய அறிமுகத்தை செய்தவர் சார்லஸ் டார்வின் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது செல்ல பிராணி எது தெரியுமா.. ஆமை தான். தொடக்கத்தில் அது செல்லப்பிராணியாக இல்லை.. கலபகோஸ் தீவுகளுக்கு அவர் சென்ற பிறகு, அதற்கு ஹாரியட் என பெயரிட்டு வளர்த்தார். ஆனால் தனது உரிமையாளரை காட்டிலும் 126 ஆண்டுகள் அந்த ஆமை உயிர் வாழ்ந்தது. அதாவது 176 வயதில் கடந்த 2006 இல் அது உயிரிழந்தது. ஹாரியட்டை இறுதியில் வளர்த்தவர் பிரபல முதலை வேட்டையாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இர்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ம முக்கோணம்

மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம். இங்கு கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைந்தன. அதற்கான காரணம் பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தானாம். கில்லர் க்ளவுட்ஸ் என்று அழைக்கப்படும், பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் இந்த மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) இருப்பதால், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதனாலேயே, பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.

ஆயுளை கூட்ட

நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சிசெய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.

பெயருக்கு காரணம்

ஏஜியன் கடலின் கிழக்கு பகுதியில் இருந்த இடங்களைதான், கி.மு 400-களிலிருந்து, ஆசியா கண்டம் என அழைத்தனர். இதனாலேயே, அப்பெயர் வந்தது.  காலப்போக்கில் மொத்த கண்டமும் ஆசியா என அழைக்கப்பட்டது. ஏஜியா என்ற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்ததுதான் ஆசியா.

பாம்புகளால் நிலநடுக்கத்தை உணர முடியுமா ?

பொதுவாக விலங்குகள் மனிதர்களைக் காட்டிலும் இயற்கை சார்ந்து மிகவும் நுண்ணுணர்வு மிகுந்தவையாக செயல்படக் கூடியவை இதில் குறிப்பாக பாம்புகள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரக்கூடிய திறன் படைத்தவையாக விளங்குகின்றன இவைகளுக்கு நிலநடுக்கம் வருவது முன்கூட்டியே தெரிந்துவிடும் அதிலும் குறிப்பாக 75 மைல்கள் முன்பாகவே நிலநடுக்கம் ஏற்படுவதை இதை உணர்ந்து கொள்கின்றன மேலும் நிலநடுக்கம் தோன்றுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே பாம்புகள் அதை அறிந்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள்

எண்ணெய் குளியல்

ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக அது நடந்துவிட்டதாக நினைத்துப் பயப்படுவது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டால் ஏற்படுகிறது. இதற்கு தலையில் க்ஷீரபலா எண்ணெய், பலா அஸ்வகந்தா எண்ணெய் போன்றவற்றைத் தேய்ப்பதால் நரம்பு மண்டலத்தின் துரித நிலை குறைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் குளியல் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த மருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago