நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசா வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.
பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..
நோயாளியின் தொண்டை பகுதியில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் ரோபா நவீன கருவியை உருவாக்கியுள்ளனர். வளையத்தக்க தன்மை கொண்ட இந்த கருவி, குறைந்த அளவில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யவும் மற்றும் நுழையக்கூடிய முடியாத மிகவும் கடினமான மனிதனின் தொண்டை பகுதியில் நுழையும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேமரா, ஒரு ஜாய்ஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளது.
பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.
430 கோடி ஆண்டுகள் பழமையான பாக்டீரியா படிமங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு கியூபெக் பகுதியில் அமைந்துள்ள ஹட்சன் கடற்கரையோரம் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. பூமி தோன்றிய சிறிது காலத்திலேயே இந்த பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம் என இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


