முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தங்கத்தை முதலில் தோண்டி எடுத்தவர்கள் யார் தெரியுமா?

தங்கச் சுரங்கத் தொழில் ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தங்கம் எகிப்து நாட்டில்தான் முதலில் தோண்டி எடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; தங்கச் சுரங்கத் தொழிலின் பல்வேறு படிநிலைகளைக் (stages) காட்டும் சுவரோவியங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆற்றுத் தண்ணீரிலிருந்தும் தங்கம் பெறப்பட்டது; நீரிலிருந்து ஆற்று மணலைச் சலித்து, எடை மிகுந்த தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர். கி.மு. 3000 ஆண்டுகளில் தங்க மோதிரங்கள் ஒரு வகை ஊதியமாகத் தரப்பட்டதாம். நாணயங்களாகத் தங்கம் வழங்கப்பட்டதோடு, அணிகலன்களாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சுமார் கி.மு.2000 ஆண்டுகளில் தரைக்கு அடியில் இருந்து தங்கத் தாதுப் பொருட்களைக் (ores) கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கம் பெறப்பட்டது. தங்கம் அதன் தரத்திற்கேற்ப நாணயத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனில் இந்த நாணய மாற்றுமுறை 1821ஆண்டு அறிமுகப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பருக்கள் மறைய...

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, பின் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயார்  செய்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

இலையுதிர் காலத்தில் இலையை உதிர்க்காத மரங்கள்

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. அவற்றில் சைப்ரஸ் வகை மரங்களும் அடங்கும். Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இவற்றை நாம் கிறிஸ்துமஸ் மரங்கள் என பொதுவாக குறிப்பிடுவோம். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.  நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை போல அல்லாமல் குளிர் பிரதேச மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் காஸ்ட்யூமுக்காக விளம்பரங்கள்

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோன்மையான ஆட்சியை சித்தரிக்கும் படமாக ஹாலிவுட்டின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் விளங்கியது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பைட்ரிக்கா ஷெப்பர்ட் என்பவர் பணியாற்றினார். படத்தில் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு பழங்கால உடைகள் தேவைப்பட்டது. இதற்காக விளம்பரம் செய்யப்பட்டது. போலந்தில் உள்ள ஏராளமான மக்கள் தங்களிடம் இருந்த 1930களின் உடைகளை அப்படத்துக்காக விற்க முன்வந்தனர். இவ்வாறுதான் படத்தில் காஸ்ட்யூம் உருவானது. இதற்காக பின்னர் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago