முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

மிகவும் உயரமான இடத்தில் கிரிக்கெட் மைதானம்

உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் கிரிக்கெட் மைதானம் எங்கே அமைந்துள்ளது தெரியுமா.. அதுவும் இந்தியாவில்தான். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சைல் என்ற இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் தான் உலகிலேயே அதிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானமாகும். இது 1893 இல் உருவாக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சர்வதேச நகரம்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது  ஆரோவில் நகரம். இந்நகரம் 124 உலக நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மூலம் கட்டப்பட்டது. யுனெஸ்கோ இந்நகரை ஒரு சர்வதேச நகரம் என அங்கீகரித்துள்ளது. இங்கு, 50 நாடுகளில் இருந்து பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தகவல் பரிமாற்றத்துக்கு தந்தி என்ற கருவி இருந்தது தெரியுமா?

இன்றைக்கு தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தொலைபேசி, அலைபேசி, இமெயில், எஸ்எம்எஸ், என்று படிப்படியாக வானளாவிய அளவில் வளர்ந்து விட்டது. ஆம் உண்மையிலேயே வானத்துக்கு சென்று விட்டது. செயற்கை கோள்கள் மூலம் தகவல் பரிமாற்ற காலத்தை அடைந்துள்ளோம். ஆனால் தொடக்கத்தில் டெலிகிராஃப் எனப்படும் தந்தி என்ற முறையில் செய்திகளை அனுப்பினோம். இதை அமெரிக்காவில் உள்ள ஓவியர் சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837 இல் கண்டுபிடித்தார். எனவே தந்திக்கு மோர்ஸ் தந்தி என்ற பெயர் வந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது.  பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவையை பிரிட்டன் 1846 இல் நிறுவியது. இந்தியாவில் 1850 இல் சோதனை முறையில் கொல்கத்தாவுக்கும் டயமண்ட் துறைமுகத்துக்கும் இடையே நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1851 இல் கிழக்கிந்திய கம்பெனி இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 1902 இல் முதன்முறையாக கம்பியில்லா தந்தி முறை அறிமுகமானது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் குறைந்துவிட்டது. இதையடுத்து 2013 ஜூலை 15 முதல் இந்தியாவில் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

இ்ந்திய பெருஞ்சுவர் எங்கிருக்கிறது தெரியுமா?

சீன பெருஞ்சுவர் தெரியும்... அதென்ன இந்திய பெருஞ்சுவர்... உலகின் மிக நீளமான சுவராக விளங்கும் சீனப்பெருஞ்சுவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவிலும் நீளமான சுவர் கொண்ட கோட்டை ஒன்று இருக்கிறது. அதனை பலரும் அறிந்திராத நிலை உள்ளது. ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் அந்த சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் மலை பிரதேசத்தினுள் சூழ்ந்திருக்கும் அதன் பெயர், ‘கும்பல்கர்க் கோட்டை’. இந்தக் கோட்டை ராஜ ராணா கும்பா என்ற மன்னனால் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டைக்கு செல்லும் வழியில் அரணாக எழுந்து நிற்கும் இந்த சுவர் சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் கோட்டை வரை நீள்கிறது. மலை பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். யுனஸ்கோவின் பட்டியலிலும் இந்த சுவர் இடம் பெற்றிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago