முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய தொழில்நுட்பம்

தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

'ட்விட்டர்' தெரியாதது

பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை

ஆரோக்கியம் தரும்

நாம் சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம். அவற்றில் மஞ்சள் மிகவும் முக்கியம். இது நம் உடலுக்குச் சிறந்த மருந்து. மூட்டு வாதம், பெருங்குடல் புண், செரிமானக் கோளாற்றை சரி செய்யும். அடுத்து லவங்கப்பட்டை. இதை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறையும். பூண்டு, இதய நோய் வராமல் தடுக்கும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பூண்டுக்கு புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் திறன் உள்ளது. இஞ்சி, மலச்சிக்கல், கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். செரிமானத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது. வெந்தயம், நெஞ்செரிச்சல் அறிகுறிகளைச் சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

3டி பிரிண்டிங் முறையில் கட்டப்பட்ட பள்ளிக் கூடம்

3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் இன்றைக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை உறுப்புகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்து வரும் இந்த தொழில் நுட்பம் தற்போது கட்டுமானத்துறைக்குள்ளும் தனது காலடியை பதித்துள்ளது. முதன் முறையாக 3டி முறையில் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி சாதனை படைத்துள்ளனர். இனி மேல் எந்த இடத்திலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியை கட்டி விடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உலகிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட பள்ளி கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது. ஆப்ரிக்காவில் உள்ள மாலாவியில் இந்த பள்ளி 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கட்டிடப் பொருள்களை தயாரிப்பதில் பிரபலமான பிரிட்டனில் உள்ள நிறுவனமும், சுவிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இதன் மூலம் உடனடியாகவும், தேவையான இடங்களிலும் இது போன்ற கட்டிடங்களை எதிர்காலத்தில் தயாரிக்க முடியும் என அவை தெரிவித்துள்ளன.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்

இந்தியாவில் பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக ஜம்முவில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலம் தண்ணீருக்கு 1,178 அடி உயரத்தில் உள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலம் ஆகும். இது உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும், பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 30 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago