முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கொசுக்களை அழிக்க

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான 'வெரிலி' உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

'மனித மூளை' ஆச்சரியம்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனித உறுப்பு மூளைதான். மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பது போன்றவைகள்தான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை.  சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும். இதில், பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன பரிமாற்றம் தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும்.

அகத்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி.

கோஹினூர் வைரம்

கோஹினூர் வைரம், 105 கேரட் (21.6 கிராம்) எடை கொண்டது. கோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் மலை அளவு ஒளி என்று பொருள். இது இந்தியாவில், ஆந்திர மாநிலத்தின் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் எனும் கிராமத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 5000 ஆண்டுகள் பழமையான இந்த வைரம் பல கைகள் மாறி 1793-ல் பாரசீக மன்னன் நாதிர்ஷா கைக்குப் போனது. அவரே இந்த வைரத்துக்கு கோஹினூர் வைரம் என்று பெயரிட்டார். அதன்பின்னர் பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. வணிகம் செய்ய வந்து காலனி ஆதிக்காமாக இந்தியாவை மாற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்.ஜான் லாரன்ஸ் இதனைக் கைப்பற்றி, அதை இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு பரிசளித்தார். தற்போது, கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago