முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பார்லி வலிமை

கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதுமான பார்லி அரிசி  காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. வயது முதிர்வை தடுத்து இளமையை தக்க வைக்கும் மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது பெருங்குடல் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக விளங்குகிறது.

தேபெஸ் என்ற பழங்கால நகரம் எங்குள்ளது

தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

வெயிலை சேமிக்கும் கருவி

குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். உண்மைதான். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தை சேமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின்போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டு சுற்றிலும் பரவும்.

எரியும் பனிக்கட்டி

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில்,  சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.

அதிவேகம்

சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.

புதிய கடிகாரம்

ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ அந்த நேரத்தைக் கூட அளவிடும் கடிகாரத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது லேசர் பீம்களோடு இணைக்கப்பட்டு விண்கலத்துக்கும், கோள்களின் தரை பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய உதவும் என்றும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago