முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாம் எப்போதும் இறந்த காலத்தில் தான் வாழ்கிறோம்

நம்மூர் ஞானிகள் தொடங்கி ஆன்மிக பேச்சாளர்கள் வரை  அனைவரும் விழிப்புணர்வு, இங்கே, இப்போது என்று பேசுவதை கேட்டிருப்போம். அதாவது எப்போதும் நிகழ்காலத்தில் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வுடன் இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள் என ஒரு வாறு நாம் அனுமானிக்கலாம். இருந்த போதிலும் நமது எண்ணங்களும், நினைவுகளும் கடந்த காலத்திலேயே இருக்கின்றன. நிகழ்காலத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு சற்று தாமதமாகத்தான் நிகழ்கிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பேலார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் டேவிட் ஈகிள்மேன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் நிகழ்காலத்திலிருந்து நாம் சுமார் 80 மில்லி விநாடிகள் பின்தங்கியே இருக்கிறோம் என்று கண்டறிந்துள்ளார். அதாவது சம்பவம் நடப்பதற்கு சற்று பிந்தி நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம்். நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவாம். என்ன கொடுமை சார் இது...

செல்போனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.

பெயருக்கு காரணம்

ஏஜியன் கடலின் கிழக்கு பகுதியில் இருந்த இடங்களைதான், கி.மு 400-களிலிருந்து, ஆசியா கண்டம் என அழைத்தனர். இதனாலேயே, அப்பெயர் வந்தது.  காலப்போக்கில் மொத்த கண்டமும் ஆசியா என அழைக்கப்பட்டது. ஏஜியா என்ற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்ததுதான் ஆசியா.

ஆர்வத்தை தூண்டும்

குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்க அவர்கள் விரும்பி உண்ணுவர்.

இந்தியா தயாரித்த முதல் ராக்கெட்

அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட  ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..

நினைவாற்றலை அதிகரிக்க

மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் எனவும் சிந்தனைத் திறனை மேம்படுகிறதாம்.மேலும், அவர்களின் மூளை ஐந்து வயது இளமையாகி விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக 60 சதவீதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு 63 நிமிடங்கள் தூங்குகிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago