பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யப்படுகிறது. ஆனால் அவர் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.
உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.
கிறிஸ்தவர்கள் வணங்கும் புனித கடவுளான இயேசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் தெரியாது. புனித நூலான பைபிளிலும் இயேசுநாதரின் உருவ அமைப்புகள் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் இயேசுநாதரின் உண்மையான தோற்றம் என இங்கிலாந்து ஆய்வாளர் ரல்பெக்எல்லிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார். எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


