முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாலின் மகிமை

ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பசுக்களின் பாலை மனிதன் அருந்தி வந்துள்ளான்.  உலகின் பால் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியவை பசுக்களே. ஒரு பசுமாடு தன் ஆயுள் காலத்தில் 2 லட்சம் டம்ளர் பால் தரும். பண்ணை மாடுகளே உலகின் 90 சதவீத பால் தேவையை பூர்த்தி செய்கின்றன.

பெண்களுக்கு மட்டும்

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன.

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

பாலினம் அறிய

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பாலினம் குறித்து அறிய எளிய சோதனையாக டிரானோ பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க, இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. நீலமாக தோன்றினால் ஆண் குழந்தை என்றும் அறிந்து கொள்ளலாம்.

16-ம் நூற்றாண்டிலேயே....

எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

செலவு குறைவு

தற்போது ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் செலவு குறைவான புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் சிறப்பு பேப்பரில் உள்ள பிரஸ்ஷியன் நீலம், டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது. இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துகள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!