Idhayam Matrimony
முகப்பு

ஈரல் வறுவல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

ஈரல் வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. கோழி ஈரல் - 1/2 கிலோ.
  2. மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
  3. மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்.
  4. சின்ன வெங்காயம் - 10.
  5. சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்.
  7. ரிபைன்ட் ஆயில் - 100 மில்லி.
  8. கறிவேப்பிலை,கொத்தமல்லி -சிறிதளவு.
  9. ஏலக்காய் - 3.
  10. கிராம்பு -4.
  11. பட்டை -2.
  12. சோம்பு -5 கிராம்.
  13. தக்காளி - 1.
  14. பெரிய வெங்காயம் -1.
  15. இஞ்சி - சிறிதளவு.
  16. பூண்டு  4 பல்.
  17. கல் உப்பு தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;

  1. மிக்சி  ஜாரில் 10 சின்ன வெங்காயம்  போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பூண்டு 4 பல், மற்றும் இஞ்சி சிறிதளவு எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் சோம்பு 5 கிராம், கிராம்பு 4, ஏலக்காய் 3, மற்றும் பட்டை 2  ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  5. கறிவேப்பிலை,கொத்தமல்லி  சிறிதளவு, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காய விழுது 3 ஸ்பூன், இஞ்சி  பூண்டு விழுது 2 ஸ்பூன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள்தூள்  1/2 ஸ்பூன், மற்றும் நறுக்கிய தக்காளி ஒன்றை போட்டு நன்றாக வதக்கவும்.
  8. சுத்தம் செய்த கோழி ஈரல்  1/2 கிலோ போட்டு வதக்கவும்.
  9. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்,சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,தேவையான அளவு கல் உப்பு போட்டு வதக்கவும்.
  10. 300 மில்லி தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மூடி வைத்து 20 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான ஈரல் வறுவல் ரெடி.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago