முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - முக்கால் கிலோ.
  2. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்.
  3. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  4. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  5. கார்ன் பிளவர் மாவு - 5 ஸ்பூன்.
  6. வெள்ளை எள்ளு - 50 கிராம்.
  7. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  8. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;-- 

  1. அடுப்பில் குக்கரை வைத்து தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய முக்கால் கிலோ உருளைக்கிழங்கை போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி 5 விசில் வரும் வரை உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்கவும்.
  2. வேக வைத்த உருளைக்கிழங்கில் உள்ள நீரை வடி கட்டி உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
  3. இதனுடன்  தேவையான அளவு உப்பு,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன் மற்றும் கார்ன் பிளவர் மாவு 5 ஸ்பூன்.போட்டு நன்றாக கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. இதை போல் எல்லா மாவையும் உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  5. உருட்டிய மாவை சப்பாத்தி தேய்க்கும் பலகையில் வைத்து நீளமாக வரும்படி தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
  6. இதை போல் எல்லா மாவையும் நீளமாக வரும்படி தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு தட்டில் 50 கிராம் வெள்ளை எள்ளை எடுத்துக் கொள்ளவும்.
  8. உருட்டிவைத்த மாவை எள்ளில் போட்டு மாவின் எல்லா பக்கங்களிலும்  வெள்ளை எள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. இதே போல் மீதம் உள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  11. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  12. சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்