முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

எலுமிச்சை சாதம்

Cooking time in minutes: 
20
Ingredients: 
எலுமிச்சை சாதம் செய்யத் தேவையான பொருள்கள்;
 1. சாதம் - 2 பேர் சாப்பிடும் அளவு.
 2. நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.
 3. எலுமிச்சம் பழம் -1.
 4. கடுகு - 1/2 ஸ்பூன்.
 5. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
 6. கடலை பருப்பு - 1 ஸ்பூன்.
 7. தோல் நீக்கி வறுத்த நிலக்கடலை பருப்பு - 2 ஸ்பூன்.
 8. காஞ்ச மிளகாய் - 2.
 9. பச்சை மிளகாய் - 2.
 10. கறிவேப்பிலை - சிறிதளவு.
 11. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
 12. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.  
 13. உப்பு - தேவையான அளவு. 
Method: 
எலுமிச்சை சாதம் செய்முறை ;-
 1. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
 2. நன்கு காய்ந்த உடன்  நல்லெண்ணெய்  4 ஸ்பூன் விடவும்,
 3. எண்ணெய் சூடானவுடன், கடுகு 1/2 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்,
 4. கடலை பருப்பு 1 ஸ்பூன், தோல் நீக்கி வறுத்த நிலக்கடலை பருப்பு 2 ஸ்பூன் போட்டு மிதமான சூட்டில் 2 நிமிடம் வதக்கவும்.
 5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய காஞ்ச மிளகாய் 2, சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
 6. இதனுடன் எலுமிச்சை பழ சாறு 1ஸ்பூன், பெருங்காயத்தூள் 1 சிட்டிகை,  
 7. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
 8. இப்போது அடுப்பை ஆப் செய்து 5 நிமிடம் ஆற வைக்கவும்,பின்னர் வேக வைத்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்கு கலந்து விடவும்.
 9. இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்,
 10. இதை ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் பரிமாறலாம்.
 11. சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!